Bogawantalawa Tea Estates PLC, the world’s first Climate Positive Tea Company, commemorated World Environment Week 2026 through a comprehensive environmental conservation and climate action campaign that brought together government institutions, schools, estate communities, employees, and environmental stakeholders in a collective effort to strengthen biodiversity conservation, ecosystem restoration, and climate resilience, throughout the country. Aligned with…
நிலவும் அதிக வெப்பம் தொடர்பில் புதிய அறிவிப்பு
பல மாவட்டங்களில் நிலவும் மிகவும் வெப்பமான வானிலை கவனம் செலுத்த வேண்டி இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பநிலை மனித உடலால் உணரப்படும் அவதான மட்டத்தில் இருப்பதாக திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.