நீலங்களுக்கு இடையிலான 146ஆவது சமருடன் கைகோர்த்த Domino’s Sri Lanka!

இலங்கை, கொழும்பு, 2025 மார்ச் 03: உலகின் மிகப்பெரிய பீட்சா சங்கிலியும், தரம் மற்றும் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ள நிறுவனமுமான Domino’s Sri Lanka (டோமினோஸ் ஸ்ரீ லங்கா) நீலங்களுக்கிடையிலான 146ஆவது (146th Battle of the Blues) கிரிக்கெட் சமருக்கான உத்திகயோகபூர்வ அனுசரணையாளராக இணைவதன் மூலம் அதன் பெருமையை நிலை நிறுத்துகிறது. உலகின் மிகப் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க பாடசாலைப் போட்டிகளில்  ஒன்றான இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கிரிக்கெட் தொடர், கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரியையும் கொழும்பு ரோயல் கல்லூரியையும் கொழும்பு SSC மைதானத்தில் ஒன்றிணைக்கிறது.

இந்தக் கூட்டாண்மை தொடர்பில், Domino’s Sri Lanka சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் செயற்பாட்டுத் திட்டமிடல் பொது முகாமையாளர்  கசுன் குணரத்ன கருத்து வெளியிடுகையில், “விளையாட்டுத்திறன் மற்றும் இளைஞர்களின் ஆற்றலின் மதிப்புகளை உள்ளடக்கிய ஒரு நிகழ்வான 146ஆவது நீலங்களுக்கிடையிலான சமரில் கூட்டுச் சேர்ந்ததில் நாம் மிகவும் பெருமைப்படுகிறோம். இளைஞர்களை மேம்படுத்துவதற்கும், களத்திலும் களத்திற்கு வெளியேயும் அவர்கள் சிறந்து விளங்க ஊக்குவிப்பதற்குமான டோமினோஸின் அர்ப்பணிப்பை இந்தக் கூட்டாண்மை எடுத்துக்காட்டுகிறது. கொண்டாட்டங்கள் மற்றும் தருணங்களை உருவாக்கும் ஒரு வர்த்தகநாமம் எனும் வகையில், இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வின் மரபுக்கு பங்களிப்பதிலும், அதனுடன் தொடர்புடைய அனைவரினதும் அனுபவத்தை மேம்படுத்துவதிலும் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

146ஆவது நீலங்களுக்கிடையிலான சமரின் ஒரு கொண்டாட்டமாக, ஒரு மட்டுப்படுத்தப்பட்ட பதிப்பைக்கொண்ட  பீட்சா பெட்டியை டோமினோஸ் ஶ்ரீ லங்கா அறிமுகப்படுத்துகிறது. கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டித் தொடரின்போது கிரிக்கெட்  இரசிகர்கள் மற்றும் பீட்சா பிரியர்கள் தங்களுக்குப் பிடித்த டோமினோஸ் பீட்சாவை  ஓர்டர் செய்யும்போது இது கிடைக்கும்.

சமூகத்தினதும் இளைஞர்களினதும் மேம்பாட்டை மதிக்கும் ஒரு வர்த்தகநாமம் எனும் வகையில், இந்த கூட்டாண்மையை சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்கான அதன் நோக்கத்தின் அங்கமாக டோமினோஸ் ஶ்ரீ லங்கா கருதுகிறது. இப்போட்டித்தொடருடன் இணைவதன் மூலம் இளம் கிரிக்கெட் வீரர்களின் விளையாட்டு அபிலாஷைகளை ஆதரிப்பதோடு  மட்டுமல்லாமல், கொண்டாட்டங்கள்  மற்றும் வாழ்க்கையின் சிறந்த தருணங்களை ஒன்றிணைப்பதில்  பாரம்பரியம்  மற்றும் கலாசாரத்தின் முக்கியத்துவத்தையும்  டோமினோஸ் வலுப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *