இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…
பங்கொக்கில் பாரிய நிலநடுக்கம்! இலங்கைத் தூதரகம் அவசர அறிவிப்பு.

தாய்லாந்தின் – பங்கொக் மற்றும் ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட பாரி நிலநடுக்கங்களைத் தொடர்ந்து அந்த நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கைத் தூதரகம் அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
இதன்படி, நிலவும் அவசர நிலையின் காரணமாக இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்பட்டால் அல்லது உதவி தேவைப்பட்டால், +66 812 498 011 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதிகளில் பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதனை அடுத்து, அங்கு வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பான எவ்வித பாதக அறிவிப்பும் வெளிவரவில்லை என்று இலங்கைத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பங்கொக்கில் உள்ள இலங்கைத் தூதரகம், தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அறிவித்துள்ளது.







இன்று(மார்ச் 28) நண்பகல் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் இதுவரை 23 உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலரை இடிபாட்டுக்குள் சிக்கியிருக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. மேலும் மியான்மரில் 6 பிராந்தியங்களில் அவசரநிலை பிரகடனம்.
தாய்லாந்தின், பாங்கொக் நகர் மற்றும் மியான்மரில் இன்று(மார்ச் 28) நண்பகல் 12.50 மணியளவில் 7.7ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியது.
மேலும் வடக்கு மற்றும் மத்திய தாய்லாந்தின் தொலைதூரப் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. கட்டிடங்கள் மற்றும் வீதிகளும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதோடு. பாரிய கட்டிடங்களும் தரைமட்டமாகியுள்ளன.
இது தொடர்பான காட்சிகள் தற்போழுது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகின்றன.