நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பண்டிகைக்காலத்தை முன்னிட்டு கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
பண்டிகைக்காலத்தை முன்னிட்டு கடவுச்சீட்டு விநியோகத்தில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 15, 16 மற்றும் 17ஆம் திகதிகளில் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவதற்காக டோக்கன் வழங்கும் செயற்பாடு நண்பகல் 12 மணிவரை மட்டுமே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நாட்களில் ஒரு நாள் சேவைக்காக நடைமுறையில் உள்ள 24 மணி நேர சேவை நாட்களில் இடம்பெறாது என குடிவரவு மற்றும் குடியகல்வு பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் பி.எம்.டி. நிலுஷா பாலசூரிய தெரிவித்துள்ளது.

