பதுளை – இராவண எல்ல வனப்பகுதியில் காட்டுத் தீ, அதிகளவான நிலப்பரப்பு தீயில் நாசமாகின.

எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராவண எல்ல வனப்பகுதியில் வெப்ரவரி 13ம் திகதி இரவு கட்டுத்தீ பரவியுள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள அதிகளவான நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த காட்டுத்தியானது குறித்த வனப்பகுதியில் தனிநபரொருவர் அல்லது குழு ஒன்றினால் தீ வைக்கப்பட்டு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவிவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு கடினமாக இருந்ததாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் இ.எம்.எல். உதய குமார தெரிவித்தார்.

தற்பொழுது வறண்ட காலநிலை காணப்படுவதனால் எந்தவொரு தேவைக்காகவும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் காடுகளில் தீ வைப்பதைத் தவிர்க்குமாறு வனப் பாதுகாப்புத் துறை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

குறிப்பாக மத்திய மலைநாட்டின் உணர்திறன் மிக்க சுற்றுச்சூழல் அமைப்புகளை இதுபோன்ற நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கும் என்று இயக்குநர் ஜெனரல் நிஷாந்த எதிரிசிங்க வலியுறுத்தினார்.

மேலும் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, இரத்தினபுரி, மொனராகலை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 11 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்தத் தீ சம்பவத்திற்கு காரணமான நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிரிசிங்க கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *