The new product stack brings together Binance AI, Binance AI Pro, and Binance Agent OS to help people understand financial information, turn ideas into strategies, and build on Binance During a livestreamed event held recently, Binance Co-CEO Richard Teng and VP of Product Jeff Li unveiled Binance Intelligence, an AI product stack built into the…
பல மணி நேரம் ஆகாயத்தில் வட்டமிட்ட துருக்கி விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் :
கொழும்பில் இருந்து, துருக்கி, இஸ்தான்புல் நோக்கிப் பயணித்த துருக்கி ஏர்லைன்ஸ் (Turkish Airlines) விமானம் இலங்கை வான் பரப்பில் பல மணிநேரம் வட்டமிட்டபின் இன்று அதிகாலை 12.27 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் எவருக்கும் எவ்வித சேதங்களும் இல்லையென விமானநிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
விமானத்தின் தரையிறங்கும் கியரில் (Landing Gear) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அது இன்று அதிகாலை (டிசம்பர் 17, 2025) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) குறித்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
TK-733 என்ற துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் 202 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களுடன் 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல்லுக்குப் புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் தரையிறங்கும் கியரில் கோளாறு ஏற்பட்டதை விமானிகள் கண்டறிந்தனர்.
இதனையடுத்து, விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கத் தயார்படுத்தும் நடைமுறைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டன.
அவசரமாகத் தரையிறங்கும் முன் எரிபொருளை எரிப்பதற்காக (Fuel Burn) குறிப்பிட்ட நேரத்தில் வானில் விமானமானது பல மணி நேரம் வட்டமடித்தது.
அதன்படி, விமானம் சிலாபம் கடல் பகுதியின் வான் பரப்பில் இரண்டு மணி நேரமாக 4 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து, விமானத்தில் இருந்த எரிபொருள் அகற்ற விமானி நடவடிக்கை எடுத்தார்..
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமான நிலையத்தில் தீயணைப்புப் படை மற்றும் மருத்துவ அவசர சிகிச்சைக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
விமான ஊழியர்கள், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்துடன் (Air Traffic Control) தொடர்ச்சியான தொடர்பில் இருந்ததுடன், நிலையான அவசர கால நெறிமுறைகளைப் பின்பற்றினர்.
அனைத்து அவசர ஏற்பாடுகளுக்கும் மத்தியில், TK 733 விமானம் அதிகாலை 12:27 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், இதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்தில் அம்பியூலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ ஊழியர்கள், மீட்புப் பணியாளர்கள், நீர்கொழும்பு கடல் பகுதியில் சிறப்பு படகுகள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.
குறித்த விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விமான நிலையத்தைச் சுற்றியுள்ள ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். விமானத்தை பழுதுபார்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் மேலும் தெரிவித்தார்.
Downloaded the q9betapp, felt kinda dodgy from the get go. Anyone else feel the same? Maybe it’s me. I am on Android, might be different on iOS. q9betapp