இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
பஹ்ரைன் செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பஹ்ரைன் செல்பவர்கள் சுற்றுலா விசா மூலம் பஹ்ரைனுக்குள் பிரவேசித்து அனுசரணை இன்றி அதனை பணியாளர் விசாவாக மாற்ற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைனில் உள்ள இலங்கை தூதரகத்தை மேற்கோள் காட்டி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
அங்கு சுற்றுலா விசாவை அனுசரணையுடன் பணி விசாவாக மாற்றுவதை அனுமதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், தொழில் வாய்ப்புக்காகச் சுற்றுலா விசா ஊடாக பஹ்ரைனுக்குள் பிரவேசிப்பதனை தடை செய்வதற்கு அந்த நாட்டு உள்விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.