நாட்டின் சில பகுதிகளில் தேங்காயின் விலை மீண்டும் கிடு கிடு என அதிகரித்துள்ளது. ஒரு தேங்காய் 240 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாக 180 – 200 ரூபாவிற்கு இடைப்பட்ட விற்பனை செய்யப்பட்ட தேங்காய் மீண்டும் 220 ரூபா முதல் 240 ரூபாவிற்கும் அதிகமாக விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இதேவேளை, மே மற்றும் ஜூன் மாதங்களில் நாட்டில் தேங்காய் சாகுபடி அதிகரிக்கும் என்றும் அந்தக் காலப்பகுதியில் தேங்காயின் விலை குறையலாம்…
பாகிஸ்தானியர்களை 48 மணிநேரத்தில் வெளியேறுமாறு இந்தியா உத்தரவு

பாகிஸ்தானியர் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்திய பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, வாகா எல்லையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேறவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கு இனி விசா வழங்கப்படாது என்றும் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள், மே 1ஆம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சார்க் விசா ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படும் என்றும் மத்திய வெளிறவுத்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான சிந்து நதி ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகமும் மூடப்படுவதாகவும், பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரிகள் மே 1ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் உடனான தூதரக உதவிகளை குறைக்க முடிவு செய்துள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு வெளியுறவுத்துறை செயலர் அறிவித்துள்ளார்.