இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
பாப்பரசரின் உடல்நிலை குறித்து வெளியான அறிவிப்பு.

பாப்பரசர் பிரான்ஸிஸின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் அவருக்கு லேசான காய்ச்சல் உள்ளதாகவும் வத்திக்கான் தெரிவித்துள்ளது.
சுவாசத்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே வத்திக்கான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
88 வயதான பாப்பரசர் பிரான்ஸிஸ், வெள்ளிக்கிழமை (14) திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, வத்திக்கானில் உள்ள வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதன்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நுரையீரலில் தொற்றுப் பாதிப்பு இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது