கொழும்பு, இலங்கை, ஜுன் 2026 – சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆகாயத்தாமரையை (ஜப்பான் ஜபர) பொறுப்புடன் நிர்வகிப்பதன் ஊடாக, அதனை ஒரு பெறுமதிமிக்க புதுப்பிக்கத்தக்க மூலப்பொருளாக நிலைநிறுத்துவதற்குச் சுறுசுறுப்புடன் பங்களித்து வருகின்றது. இதற்காக அமெரிக்காவின் Scott Dunn நிறுவனம் மற்றும் ‘Conservation Collective’ ஆகியன ஒன்றிணைந்து, இந்த ஆய்வு மற்றும் வேலைத்திட்டத் தொடருக்கு நிதி அனுசரணை வழங்குகின்றன. இலங்கை சுற்றுச்சூழல் நிதியம் (Lanka Environment Fund) இதன் உள்ளூர் பங்காளராகச் செயற்படுவதுடன், அவர்களின் வழிகாட்டலின் கீழ் ‘The…
மூடப்பட்டுள்ள பேராதனை பல்கலைக்கழகம்!
தற்போதைய மோசமான வானிலை காரணமாக பேராதனை பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
விடுதிகளில் உள்ள மாணவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் விடுதிக்கருகாமையிலும் வெள்ளநீர் ஊடுருவியுள்ளது.
மேலும், கனமழை காரணமாக மகாவலி நதி நிரம்பி வழிவதால் பேராதனையில் உள்ள றோயல் தாவரவியல் பூங்கா (மல்வத்தை) தற்போது நீரில் மூழ்கியுள்ளது.
அதன்படி, பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள பல தாழ்வான பகுதிகளும் தண்ணீரில் நிரம்பியுள்ளன. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
காணொளி – சமூகவலைத்தளம்