டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
பாழடைந்த காணியிலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

கல்கிஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுதாகொட வீதியில் உள்ள பாழடைந்த காணியிலிருந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் இரத்மலானை-மஹிந்தாராம வீதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் கடந்த 30 ஆம் திகதி இரவு வீட்டை விட்டு வெளியேறி இருந்த நிலையில், வீடு திரும்பாத காரணத்தினால் இது குறித்து அவரது சகோதரர்களில் ஒருவர் கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
சடலம் நீதவான் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலைக்கு காரணமான சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.