தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குடும்பத்தகராறில் பெண்ணொருவர் கொலை
குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கணவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். தங்காலை பொலிஸ் பிரிவின் பொலொன்மாருவ வடக்கு பகுதியில் நேற்று (03) இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் அதே பகுதியை சேர்ந்த 49 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

