ශ්රී ලංකාවේ කොළඹ නගරයේ සුප්රසිද්ධ Altair ගොඩනැගිල්ලෙහි හි නව ප්රදර්ශනාගාරයක් විවෘත කරමින් Kia සන්නාමය එහි අඛණ්ඩ ව්යාප්තිය සහ පාරිභෝගික සම්බන්ධතාවයන් හි සැලකිය යුතු පියවරක් ඉදිරියට තබා ඇත. 2026 අප්රේල් 7 වන දින මාධ්ය වෙත එළිදක්වන ලද මෙම නව ප්රදර්ශනාගාරය Altair ගොඩනැගිල්ලෙහි Retail 3 කොටස තුළ වර්ග අඩි 2,700 ක පමණ අවකාශයක් පුරා ව්යාප්තව ඇත. උපරිම…
“பிடியளவு கமநிலத்துக்கு” திட்டம் தற்போது உப்புவேலி முத்துநகரில் ஆரம்பம்.
இலங்கை முழுவதுமாக வினைத்திறன் மிக்க விவசாயத்தை ஊக்குவிக்கும் முகமாக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய வேலைத்திட்டமான “பிடியளவு கமநிலத்துக்கு”எனும் திட்டம் நேற்று (வெப்ரவரி 15) திருகோணமலை மாவட்ட உப்புவேலி கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்களத்திற்கு உற்பட்ட முத்துநகர் பகுதியில் ஆரம்பமானது.
உப்புவேலி கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்களம் மற்றும் முத்துநகர், தகரவெட்டுவான், மத்தியவேலி, அம்மன்குலம் ஆகிய விவசாய சம்மேளனங்களின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வானது உப்புவேலி கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் டி.தர்ஷானந்தன் தலைமையில் இடம்பெற்றது.
விவசாயத்தை ஊக்குவிக்கும் இத்திட்டத்தின் ஆரம்பநிகழ்வில் விவசாயிகளுக்கு குறித்த திட்டங்களுக்கான அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டதோடு, விவசாய காணிகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டன.
