உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
பிரபல நடிகை “மாலினி பொன்சேகா” வைத்தியசாலையில் அனுமதி.

இலங்கை சிங்கள சினிமாவின் நடிப்பரசி என மகுடம் சூட்டப்பட்ட மாலினி பொன்சேகாவின் உடல்நிலை மோசமடைந்து நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில காலமாக அவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் அதற்க்கான உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள கவனயீனமாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையிலேயே நோயின் வீரியம் அதிகரித்தமையினால் தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.