புகையிரத விபத்தில் 5 யானைகள் பலி.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த “மீனகயா” புகையிரதத்தில் காட்டு யானைகள் மோதி இடம்பெற்ற விபத்தில் 5 யானைகள் உயிரிழந்துள்ளதுடன் இரு யானைகள் காயமடைந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று (வெப்ரவரி 19) இரவு கல்லோயா புகையிரத நிலையத்துக்கு அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் காரணமாக அந்த பிரதேசத்தில் புகையிரத போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *