புதிய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற்ற ஏற்றமும் இரக்கமும்

“வளமான நாட்டுக்கான முதற்படி” என்ற தொனிப்பொருளில் நிதியமைச்சர் என்ற வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்தார் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க புதிய வரவுசெலவுத்திட்டத்தை முன்வைக்க முன் “2028 ஆம் ஆண்டு கடன்களை கடனை மீளச் செலுத்தும் வகையில் நாட்டை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் 2025 ஆம் ஆண்டில் 5% பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதாகவும்” தெரிவித்தார்.

2025 ஆண்டிற்க்கான புதிய அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்.

  1. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பெர்மிட்டோ வாகனங்கள் இல்லை.

இந்த ஆண்டு எம்.பி.க்களின் வாகனங்களுக்கு பணம் ஒதுக்கப்படவில்லை. அவர்களுக்கு வாகன அனுமதிகளும் கிடைக்காது. அதிக செலவாகும் அனைத்து அரச சொகுசு வாகனங்களும் மார்ச் மாதம் ஏலத்தில் விடப்படும்.

  1. மகாபொல புலமைப்பரிசில் 5,000 த்திலிருந்து 7,500ரூபாயாக அதிகரிக்கப்படுவதோடு 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை 750 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கு நிலையான மற்றும் பாதுகாப்பான வீட்டைக் கட்ட ஒரு மில்லியன் ரூபாயும் தடுப்பு மையங்கள் மற்றும் அனாதை இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கான உதவித்தொகை 5000 ரூபாயாகவும், நன்னடத்தை காலத்தில் உள்ள குழந்தைகளின் நலனுக்காக ஐநூறு மில்லியன் ரூபாயையும் ஒதுக்க முன்மொழிவு.

அங்கவீனமடைந்தோர் தொடர்பான விரிவான தரவு அமைப்பை உருவாக்க 100 மில்லியன் ரூபாய்.

  1. வட மாகாண அபிவிருத்திக்கு

யாழ்ப்பாண நூலகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ. 100 மில்லியன் ஒதுக்கப்படும். நாட்டின் பிற பகுதிகளில் உள்ள நூலகங்களின் மேம்பாட்டுக்காக ரூ. 200 மில்லியன் ஒதுக்கப்படும்.

வட மாகாணத்தில் 16,000 புதிய ஏக்கர் தென்னை தோட்டங்கள் நிறுவப்படும்.

வடமாகாணத்தில் கிராமிய வீதிகள் மற்றும் பாலங்களை மேம்படுத்த ரூ.5000 மில்லியன் ஒதுக்கிட முன்மொழிவு

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தினை புனரமைப்பு செய்ய 1000 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்ய முன்மொழிவு

3.திருகோணமலையில் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து அறுபத்தொரு எண்ணெய் தொட்டிகள் அபிவிருத்தி செய்யப்படும்.

கிழக்கு மாகாணத்தை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும்.

4. தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1,700 ஊதியம் வழங்குவது அமுல்படுத்தப்படும்.

5.ஜனாதிபதி நிதிய பங்களிப்பு

சிறுநீரக நோயாளிகளுக்கான உதவித்தொகை 7500 ரூபாயில் இருந்து 10000 ரூபாயாக அதிகரிக்கப்பட்ட அதே வேளையில், குறைந்த வருமானம் பெறும் மூத்த குடிமக்களுக்கான உதவித்தொகை 3000ரூபாயில் இருந்து 5000ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அஸ்வேசும சலுகைகளுக்காக 232.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதோடு மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்க 15 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

6. அரச ஊழியர்கள், அரச வேலைவாய்ப்பு மற்றும் ஓய்வூதியக்காரர்கள்


பாலர் பாடசாலை ஆசிரியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

அரச சேவையில் முதல் அடிப்படை சம்பள திருத்தமாக குறைந்தபட்ச மாதாந்திர அடிப்படை சம்பளத்தை 24,250ரூபாயில் இருந்து 40,000ரூபாயாக ஆக உயர்த்த முன்மொழியப்பட்டது. மேலும் தற்போதுள்ள இடைக்கால கொடுப்பனவு மற்றும் சிறப்பு கொடுப்பனவை அடிப்படை சம்பளத்துடன் இணைத்து, குறைந்தபட்ச ஊதியத்தில் நிகரமாக 8,250 ரூபாய் அதிகரிக்க முன்மொழிவு.

அரச துறையில் முப்பதாயிரம் வெற்றிடங்கள் நிரப்பப்படும். அதற்கென 10,000மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

01.01.2020 க்கு முன்னர் ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியங்கள், பொது நிர்வாக சுற்றறிக்கை எண் 1 இன் படி, 2020 ஆம் ஆண்டுக்கு பொருந்தக்கூடிய சம்பள அளவுகளின் அடிப்படையில் மூன்று கட்டங்களாக திருத்தப்படும் என
தெரிவித்தார்.

7.மீள்குடியேற்றத்திற்காக ரூ.1,500 மில்லியன் ஒதுக்கப்படும்.

8.கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துக்கு 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

9.பண்டிகைக் காலத்திற்காக சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *