டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
“பெருசு” – பெருசா சாதிச்சிடும்

கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 14) இந்திய தமிழ் சினிமாவில் வெளிவந்த பெருசு திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இலங்கை நாட்டின் புகழ்பூத்த இயக்குனர் இளங்கோ ராமநாதன் இயக்கத்தில் வைபோவ், நிஹாரிகா,சுனில் ரெட்டி, பால சரவணன், சாந்தினி மற்றும் குழுவினரின் நடிப்பில் வெளியான “பெருசு” இந்த ரெண்டு நாட்களில் வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.
இதுவரை பெருசு திரைப்படம் உலகளாவியரீதியில் ரூ. 1.8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்த திரைப்படம் முன்னதாக இயக்குனர் இளங்கோ ராமநாதனால் இலங்கையில் “நெலும் குழுந” என்ற பெயரில் இலங்கையின் பிரபல கலைஞர்களின் நடிப்பில் வெளிவந்து வெற்றிநடைபோட்டு சர்வதேச விருதுகளையும் வென்றது குறிப்பிடத்தக்கது.