Power World Gyms, Sri Lanka’s leading fitness brand with over 30 years of promoting healthier lifestyles, has partnered with Kings Hospital Colombo as its Official Wellness Partner. This collaboration brings together expertise in fitness and healthcare to introduce a dedicated wellness programme for the hospital’s staff, supporting their physical and mental well-being. Through this partnership,…
பெற்றோலிய களஞ்சிய மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம்
பெற்றோலிய உற்பத்திகளின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக கொலன்னாவை முனையத்தில் தற்போது 30 மற்றும் 31 ஆம் இலக்க எரிபொருள் களஞ்சியத்தின் புதிய தாங்கி மூலம் புனரமைக்க வேண்டிய தேவையைக் கருத்தில் கொண்டு, குறித்த பணிகளுக்கு இலங்கை பெற்றோலிய மொத்தக் களஞ்சிய முனையக் கம்பனியின் நிதியைப் பயன்படுத்தி பெறுகைச் செயன்முறையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2025.11.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 11 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
அதற்கமைய, பெற்றோலிய உற்பத்திகளின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக 30 மற்றும் 31 ஆம் இலக்க எரிபொருள் களஞ்சியத்தின் புதிய தாங்கி மூலம் புனரமைக்க வேண்டிய தேவையைக் கருத்தில் கொண்டு, குறித்த பணிகளுக்கு இலங்கை பெற்றோலிய மொத்தக் களஞ்சிய முனையக் கம்பனியின் நிதியைப் பயன்படுத்தி பெறுகைச் செயன்முறையை நடைமுறைப்படுத்துவதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
