டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
பேருந்து விபத்தில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லுணுகம்வெஹெரவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து இன்று (வெப்ரவரி 15) அதிகாலை 4 மணியளவில் கவிழ்ந்து விபத்துள்ளாகியுள்ளது.
விபத்து நடந்த போது பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பேருந்தின் சக்கரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறே விபத்துக்கு காரணம் என கூறப்படுவதுடன்
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.