இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…
பொசன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 19,185 தானசாலைகள்

2025 பொசோன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 19,185 பொசன் தானசாலைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் (பொது சுகாதார சேவைகள்) விசேட வைத்தியர் லக்ஷ்மி சோமதுங்க தெரிவித்துள்ளார்.
பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களின்படி, கொழும்பில் 944, கம்பஹாவில் 1,792, களுத்துறையில் 977, கண்டியில் 1,264, மாத்தளையில் 812, நுவரெலியாவில் 352, காலியில் 1,186, மாத்தறையில் 1,021, அம்பாந்தோட்டையில் 533, யாழ்ப்பாணத்தில் 03, கிளிநொச்சியில் 03, முல்லைத்தீவில் 17, வவுனியாவில் 21, மன்னாரில் 02, மட்டக்களப்பில் 09, அம்பாறையில் 584, கல்முனையில் 14, திருகோணமலையில் 152, குருணாகலையில் 2,114, புத்தளத்தில் 731, அனுராதபுரத்தில் 2,301, பொலன்னறுவையில் 650, பதுளையில் 968, மொனராகலையில் 716, இரத்தினபுரியில் 1,097 மற்றும் கேகாலையில் 922 என நாடு முழுவதும் தானசாலைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
“பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான தானசாலையை ஒழுங்கு செய்வதற்கான விரிவான வழிகாட்டுதல்கள்” என்ற தலைப்பில், கடந்த 2025 மே 6 ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட வழிகாட்டுதல் தொடர் வெளியிடப்பட்டது.
இந்த வழிகாட்டுதல்களில், சுகாதார அதிகாரிகளுடன் தானசாலைகளை பதிவு செய்தல், பொது சுகாதார பரிசோதகர்களால் தகவல்களை சேகரித்தல், உணவு தயாரிப்பவர்களின் தனிப்பட்ட சுகாதாரத்தை உறுதி செய்தல், உணவு கையாளுபவர்கள் பின்பற்ற வேண்டிய கை சுத்தமாக வைத்திருத்தல் தொடர்பான சுகாதார நடைமுறைகள், உணவு கையாளுபவர்களின் சுகாதார நிலை, பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், உணவு தயாரித்தல், கழிவு அகற்றல், உணவு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு, உணவு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பரிசோதனை ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
தானசாலைகளை நடத்துவது உணவு மூலம் பரவும் நோய்களின் அபாயத்துடன் தொடர்புடையது எனவும், முறையற்ற உணவு தயாரிப்பு முறைகள், முறையற்ற சேமிப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளின் பற்றாக்குறை ஆகியவை இதற்கு காரணங்களாக அமைகின்றன எனவும், முறையான உணவு சுகாதார நடைமுறைகளை உறுதி செய்வது பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்கு இன்றியமையாதது எனவும், பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான தானசாலையை ஒழுங்கு செய்வதற்கான வழிகாட்டுதல்களில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.