நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சை ஏற்க தயாராகும் சரத் பொன்சேகா
தற்போதைய அரசாங்கத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இணைய வாயிலான நேர்காணலில் கருத்து வெளியிட்ட அவர்,
தனக்கு அத்தகைய பொறுப்பு வழங்கப்பட்டால் அதை ஏற்கத் தயங்க மாட்டேன் எனவும் குறிப்பிட்டார்.
இருப்பினும், ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு தான் பங்களிக்கவில்லை என்பதால், அத்தகைய பொறுப்பை கேட்க தனக்கு எந்த உரிமையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

