டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்

நபரொருவரை கடத்திச் சென்று பணம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வெலிக்கடை பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் உட்பட நான்கு சந்தேக நபர்களை ஏப்ரல் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாழைத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்குப் பிறகு, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் முன்வைத்த சமர்ப்பணங்களை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேக நபர்களை ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டு, அடையாள அணிவகுப்புக்கு ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
வாழைத்தோட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபரொருவரை கடத்திச் சென்று 16 இலட்சம் ரூபா கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை வாழைத்தோட்ட பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.