டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது

5 கோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்திலிருந்து குறித்த போதைப்பொருளை கடத்துவதற்கு முயற்சித்த நிலையில், சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயின்றுவரும் 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானம் ஊடாக நாட்டுக்குள் பிரவேசித்த அவர், தமது பயணப்பையில் பல்வேறு பொதிகளில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தமை தெரியவந்துள்ளது
Share