இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் பாவனை உறுதியானால் பணி நீக்கம்.

பொலிஸ் ஊடகப்பிரிவு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இடைநீக்கம் செய்யப்பட்ட அல்லது சேவையை விட்டு வெளியேறிய நிலையில் மீண்டும் பணியில் சேரும் அதிகாரிகளின், போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிய வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சேவையை விட்டு வெளியேறிய அல்லது இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதற்கு முன்பு போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதைக் கண்டறிய பொலிஸ் வைத்தியசாலையில் பொருத்தமான பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் என நாட்டில் உள்ள அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் இந்த அறிக்கையின்மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.