போலி இலக்கத்தகடுகளை கொண்ட மேலும் பல வாகனங்கள் சிக்கின

போலி இலக்கத்தகடுகளை பயன்படுத்தி போக்குவரத்தில் ஈடுபடும் 2,267 அதி சொகுசு வாகனங்களை பொலிஸார் இனங்கண்டுள்ளனர்.

போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு நகரத்தின் பல பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமராக்கள் ஊடாக இந்த வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த கமராக்கள் ஊடாக போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக நடவடிக்கைகள் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மோட்டார் வாகன விதிகளை மீறிய 12,246 வாகனங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *