நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மகளீர் விவகார அமைச்சரின் செயல் மக்களால் வெகுவாக பாராட்டைப்பெற்றுள்ளது.
ஜெனீவாவில் வெப்ரவரி 11 தொடக்கம் 16வரை நடைபெற்ற CEDAW உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பிய மகளிர் விவகார அமைச்சர் சரோஜா பால்ராஜ் ஒதுக்கப்பட்ட செலவுகளுக்காக பணத்தொகையின் மிகுதியை அரசாங்கத்திற்கு 240 அமெரிக்க டாலர்களாக திருப்பி கொடுத்திருக்கின்றார். அதற்கான பற்றுச்சீட்டும் பெறப்பட்டுள்ளது.
இந்த விடயம் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுவதோடு, அவருக்கான பாராட்டுகளும் குவிகின்றன.

