இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
மகா சிவராத்திரி “மாயை இருளை” வெற்றிகொள்வதைக் குறிக்கிறது – ஜனாதிபதி

மகா சிவராத்திரி விரதம் உலகிலும், வாழ்விலும் “மாயை இருளை” வெற்றிகொள்வதைக் குறிக்கிறது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானைப் பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது.
எனவே, மாயை இருள் நீங்கி ஒளி பிரகாசிக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்து பக்தர்கள் இந்த நாளில் இரவு முழுவதும் விரதமிருந்து தான தர்மங்களில் ஈடுபடுகின்றனர் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
‘பல யுகங்களாக எம்மை சகோதரத்துவத்திலிருந்து ஒதுக்கி வைத்த பிரிவு – பிளவுகளை உருவாக்கிய இருள் திரையைக் கிழித்து, ஒற்றுமையைக் கட்டியெழுப்பி இந்த பூமியில் ஒரு புதிய யுகத்தின் உதயத்தைக் காணும் வேளையில் இந்த தருணம் வந்திருக்கிறது” என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த வலுவான களத்திலிருந்து சிறந்ததொரு நாட்டை உருவாக்கிக்கொள்ள ஒரே தேசமாக நாம் அனைவரும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.