மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் புதிர் நெல் வழங்கும் நிகழ்வு இனிதே இடம்பெற்றது.

“அவனருளாலே அவன் தாள் வணங்கி” இம்முறையும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரத்தில் புதிர் நெல் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்திற்கு சொந்தமான விவசாயக்காணியில் விளைந்த நெல்ளையும் படுவான் பிரதேச வேளாண்மை செய்கையாளர்களால் ஆலயத்திற்கு வழங்கப்படும் நெல்லையும் ஆலய நிருவாகம் பகிர்ந்து பொதியிட்டு விஷேட வழிபாடுகள் நடாத்தி ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவார்கள். இந்த நிகழ்வு வருட வருடம் இடம்பெறுவதுண்டு.

நேற்று(வெப்ரவரி 14) ஆலய பிரதம குரு
மு.கு.சச்சிதானந்தம் ஐயாவின் தலைமையில் விசேட பூஜைகள் நடைபெற்று புதிர் நெல் முறைப்படி ஆலயத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு எம்பெருமானுக்கு வைக்கப்பட்டதன் பின் ஆலய பிரதம குரு, அறங்காவலர் சபையினர் மற்றும் சிவபணியாளர்களினால் சுமார் 2500 பொதிகள் ஆலயத்துக்கு வருகைதந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *