உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (28) மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ளது. கடந்த 24 மற்றும் 25ஆம் திகதிகளில் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியாதவர்களுக்குக்கு இன்றும் (25) நாளையும் (29) தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்கள், பொலிஸ், முப்படை, பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தபால் மூல வாக்காளர்கள் மேற்படி நான்கு நாட்களில் தங்களது தபால் மூல…
மண்மேட்டில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி

பெல்மடுல்ல, புலத்வெல்கொட பகுதியில் நேற்று (08) மாலை மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் புட்டுஹபுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கட்டிடம் ஒன்றின் பின்புறத்தில் சுவர் ஒன்றை அமைப்பதற்காக வந்திருந்த கட்டுமானத் தொழிலாளி ஒருவர் மீதே இவ்வாறு மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர் அந்தக் கட்டிடத்தின் உரிமையாளர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த நபர் தற்போது கஹவத்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக பெல்மடுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.