ஊழியர் நலன்களுக்கான நிதியை முறையாக வழங்காத 22,450 பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மரக்கறி விலை மோசடியை கட்டுப்படுத்த நடவடிக்கை

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் நிலவும் விலை மோசடியை விரைவில் நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக வர்த்தக, வாணிப, மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு இன்று கள விஜயம் மேற்கொண்ட போது பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
பல பொருளாதார மத்திய நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளின் போது இந்த விலை மோசடி முக்கிய பிரச்சினையாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் , விவசாயிகளுக்கு தமது மரக்கறிகளுக்கான விலையைத் தீர்மானிப்பதற்குக்கூடிய வகையிலான முறையை நடைமுறைப்படுத்துவதாகப் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.