உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
மாணவனை தாக்கிய அதிபருக்கு விளக்கமறியல்

பொலன்னறுவை பகுதியில் பாடசாலை மாணவனை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தான் கல்விகற்கும் பாடசாலையின் அதிபர் பாடசாலை நேரத்தில் தன்னைத் தாக்கி சித்திரவதை செய்ததாகக் கூறி, 17 வயது மாணவனால் முறைப்பாடளிக்கப்பட்டதை தொடர்ந்து, அப்பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகத்திற்குரிய அதிபர், தலைமுடி வெட்டப்படவில்லை எனவும், கருப்பு நிற காலுறை அணிந்து பாடசாலைக்கு வந்ததாகவும் கூறி குறித்த மாணவனை தாக்கியதாகவும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.