உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
மாணவர்களின் பெறுபேறுகளை நோக்காக கொண்டு அனுராதபுரத்தில் 55 பாடசாலைகள் இரவிலும் நடத்தப்படுகின்றன.

2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதனால் அவர்களின் பெறுபேறுகளை அதிகரிக்கும் நோக்கிலும், படத்திட்டத்தினை மாணவர்களுக்கு முழுமையாக வழங்கும் நோக்கிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மேலாதிக வகுப்புகளை வடமத்திய மாகாண கல்வித்திணைக்களம் இலவசமாக செயற்படுத்திவருகின்றது.
வடமத்திய மாகாண ஆளுநர் திரு. வசந்த ஜினதாச அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மாகாண ஆளுநர் அலுவலகம், அனுராதபுரம் வலயக் கல்வி அலுவலகம் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்துகின்றன.
அதேநேரம் வகுப்புகளை நடாத்தும் ஆசிரியர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் கட்டணம் ஏதுமின்றி அர்ப்பணிப்பு மிக்க சேவையை வழங்குகின்றார்கள்.
இந்த வகுப்புகளை ஆய்வு செய்யும் நோக்கில் அனுராதபுரத்தில் உள்ள மகாபுலங்குளம் மகா வித்தியாலயத்திற்கு மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச வருகைதந்திருந்தார். இந்த செயற்த்திட்டத்தை மிக உன்னிப்பாக அவர் அவதனித்து வருகின்றார்.
மாகாண ஆளுநரின் வருகையின் போது அனுராதபுரம் வலயக் கல்விப் பணிப்பாளர் மகேஷி மஞ்சரிகா ஹெட்டியாராச்சி, ஆளுநரின் இணைப்புச் செயலாளர் ஆனந்த ரத்நாயக்க, வர்த்தக மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பிரியந்த ரத்நாயக்க, ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரி அசேல விஜேசிங்க, மஹாபுலங்குளம் மகா வித்தியாலய அதிபர் டொரிங்டன் குமாரசிறி ஆகியோர் கலந்து கொண்டனர்.

