தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த காலத்தில் நாட்டில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பிக்க முயற்சி செய்ததோடு, கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார். இந்த தேசத்துரோக நடவடிக்கைகளுக்காகவே அவருக்கு இந்த உச்சபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாணவர்களுக்கு 2028-ல் அறிமுகமாகவுள்ள புதிய பரீட்சை.
மாணவர்களின் மன உளைச்சலை குறைக்கும் விதமான பரீட்சை ஒன்றை 2028ம் ஆண்டு நடத்த உள்ளதாக
நாடளுமன்றத்தின் இன்றைய(மார்ச் 10) அமர்வின் போது பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரான ஹரிணி அமரசூரிய மாணவர்களின் மன உளைச்சலை குறைக்கும் விதத்திலான பரீட்சை ஒன்றை 2028ல் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்ததுடன் இதன்போது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பிலும் தெளிவூட்டினார்,
புலமைப்பரிசில் பரீட்சை மூலம் ஏற்படும் குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்க அரசாங்கம் நிபுணர் குழுவொன்றை நியமிக்கும் எனவும் பாடசாலைகளுக்கு இடையில் ஏற்படும் தர வேறுபாடு காரணமாகவுமே புலமைப்பரிசில் பரீட்சை போட்டிப் பரீட்சையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், பாடசாலைகளுக்கிடையிலான தர முரண்பாடுகளை களைய முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார்.

