டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
மின்சார கட்டண குறைப்பு சரியா? தவறா?

செலவுகள் குறையாமல் மின்சார கட்டணங்களை மேலும் குறைப்பது இலங்கை மின்சாரசபையின் நிதி செயல்திறனை கணிசமாக பாதிக்கக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார விமர்சன அறிக்கையின் படி தெரியவந்துள்ளது.
2024 ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணங்கள் 20% இனால் குறைக்கப்பட்டு கட்டண திருத்தம் ஒன்று செய்யப்பட்டது.
இருப்பினும், இந்த திருத்தம் உண்மையான செலவுகளை எவ்வளவு பிரதிபலிக்கிறது என்பதில் இன்னும் தெளிவின்மை உள்ளது என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
2024 இல் மின்சார கட்டணங்கள் இரு முறைகள் திருத்தப்பட்டுள்ளன. மார்ச் மாதத்தில் 21.9% மற்றும் ஜூலை மாதத்தில் 22.5% இனால் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டணக் குறைப்பின் காரணமாக, வருடத்தின் இரண்டாவது பாதியில் மாதாந்திர இலாபம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இலங்கை மின்சாரசபை 2024 இல் ரூ.148.6 பில்லியன் இலாபத்தை ஈட்டியுள்ளது.