Power World Gyms, Sri Lanka’s leading fitness brand with over 30 years of promoting healthier lifestyles, has partnered with Kings Hospital Colombo as its Official Wellness Partner. This collaboration brings together expertise in fitness and healthcare to introduce a dedicated wellness programme for the hospital’s staff, supporting their physical and mental well-being. Through this partnership,…
மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு
நண்பருடன் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட இறக்காமம் பொலிஸ் பிரிவில் உள்ள நெய்னாகாடு சாவாறு பகுதியில் நேற்று (01) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (31) மாலை நண்பருடன் மீன்பிடிக்கச் சென்ற குறித்த மீனவர் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில், தனது கணவரை காணவில்லை என அவரது மனைவி நேற்று (01) காலை இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து, காணாமல் போன மீனவரின் நண்பரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, நேற்று (01) பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, காணாமல் போன மீனவரின் சடலம் நண்பகல் நேரத்தில் மீட்கப்பட்டது.
மேலும், சடலமாக மீட்கப்பட்டவர் கல்முனை – பாண்டிருப்பு, செல்லப்பா வீதி, பாண்டிருப்பு 01 ஏ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய செல்வராசா வெற்றிவேல் (பெரிய தம்பி) என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
அத்துடன், மீட்கப்பட்ட மீனவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்
