நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
யாழ் – பலாலி வீதி 34 ஆண்டுகளுக்குப் பின்னர் நிபந்தனைகளுடன் திறப்பு
அச்சுவேலியில் இருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கிச் செல்கின்ற அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதி இன்று காலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
அந்த வீதியில் பயணிப்பதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இராணுவக் குடியிருப்பினூடாகச் செல்லும் இந்த வீதியில், பயணிக்கும் அனைவரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுதல் வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
குறித்த வீதி, காலை 6 மணி முதல் மாலை 5 வரை மாத்திரம் போக்குவரத்திற்காக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

