டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
யாழ். வட்டுக்கோட்டையில் தண்ணீர் மோட்டார் திருடியவர் கைது

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் – வேரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தண்ணீர் மோட்டாரை திருடிய நபர் அந்த மோட்டாருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருட்டு இடம்பெற்ற வீட்டில் 3 பெண்கள் தனியாக இருந்தவேளை திங்கட்கிழமை (மார்ச் 17) அதிகாலை குறித்த சந்தேகநபர் அந்த வீட்டில் உள்ள களஞ்சியசாலையின் ஓட்டினை பிரித்து இறங்கி மோட்டாரினை திருடியுள்ளார். இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸார் நேற்றையதினமே (மார்ச் 17) அதே பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்து விசாரித்தன் அடிப்படையில் மோட்டாரினை மீட்டனர்.
பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியவேளை அவர் போதைவஸ்துக்கு அடிமையானவர் என்ற விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறும், விளக்கமறியல் முடிவடைந்த பின்னர் புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.