நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ரயில் இயக்கப்படும் அட்டவணையில் திருத்தம்.
இரவு நேரங்களில் இயக்கப்படும் ரயில்களின் தொடக்க நேரங்கள் மார்ச் மாதம் 7 ஆம் திகதி முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
காட்டு யானைகள் மோதுவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரயில்வே துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாலை 7 மணிக்கு மட்டக்களப்புக்கு புறப்பட்ட மீனகாயா எக்ஸ்பிரஸ் ரயில், மார்ச் மாதம் 7 ஆம் திகதி முதல் இரவு 11 மணிக்கு தனது பயணத்தைத் தொடங்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

