இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…
“வரி சக்தி” வாரம்

தேசிய வரி வாரம் இன்று திங்கட்கிழமை (ஜூன் 02) முதல் ஆரம்பமாகவுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே.எஸ்.சாந்த இதனை தெரிவித்துள்ளார்.
இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளது.
“வரி சக்தி” என்ற பெயரில் வரி வாரத்தை செயற்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையான காலத்தில் வரி செலுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.