வளிமண்டலவியல் திணைக்களத்தினால் மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்.

முன்னொருபோதும் இல்லாதவகையில் தினமும் வெப்பநிலையில் தாக்கம் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. அது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அது எச்சரிக்கை மட்டத்தை அடையவுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அடுத்துவரும் 24மணிநேரத்துக்கும் இது நலவக்கூடிய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.அதன்படி
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், இரத்தினபுரி மாவட்டத்திலும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பமான காலநிலையை கருத்தில் கொண்டு அவசர தேவைகள் மற்றும் இதர முக்கிய கரணங்கள் இன்றி வெளியில் நடமாடுதல் தவிர்க்குமாறும், வெயிலில் வேலையெய்ப்பவர்கள் எச்சரிக்கையோடு நடந்துகொள்ளவேண்டும் எனவும் குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் வெளீயே செல்வதை தவிர்க்குமாறும் இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறான காலநிலையில் நாம் செய்யவேண்டியது

அடிக்கடி தண்ணீர் பருக வேண்டும்

தேசிக்காய் பானத்தில் உப்பு சிறிதளவு சேர்த்து பருகுதல் , வெள்ளரிக்காய் பானம், இளநீர் போன்றவற்றை பருகவேண்டும்.இவை உடலை குளிர்மையாக வைத்திருக்கும்.

சமைத்த உணவில் வெண்டிக்காய்,பசளி போன்ற உடலுக்கு குளிர்மையை கொடுக்கும் உணவுகளை சேர்க்கவேண்டும்.

முக்கியமாக தினமும் நன்றாக நேரம் எடுத்து குளிக்க வேண்டும்.

வீடுகளை காற்றோட்டமாக வைத்திருத்தல் நல்லது.

வெளியே செல்லும்போது கண்ணடி, சூரிய ஒளியில் இருந்து கிரீம்ஸ், போன்றவற்றை பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *