நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வவுனியாவில் மூவர் கஞ்சாவுடன் கைது…!
வவுனியாவில் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (ஏப்ரல் 03) விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா, கணேசபுரம் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அதன்போதே மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 15 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதோடு அதனை வைத்திருந்த கணேசபுரம், கூமாங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 – 32 வயதிற்குட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் ,கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட நபர்கள் நெளுக்குளம் பொலிஸாரிடம் விசேட அதிடிப் படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

