நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
விசுவாவசு புத்தாண்டு பிறக்கும் நேரம்!
விசுவாவசு என்ற பெயரைக் கொண்டு, சித்திரைப் புத்தாண்டு, நாளை மலரவுள்ளது.
சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கும் நாள் சித்திரை வருடப்பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, நாளை அதிகாலை 2 மணி 29 நிமிடத்துக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, நாளை அதிகாலை 3 மணி 21 நிமிடத்துக்கும் விசுவாவசு வருடம் பிறக்கிறது.
மருத்துநீர் வைப்பதற்கான புண்ணிய காலம் இன்று இரவு 11. 21 முதல் நாளை காலை 7.21 வரை உள்ளது.
புத்தாண்டில் சிவப்பு நிறப்பட்டாடை அல்லது சிவப்புக்கரை வைத்த வெள்ளை புது வஸ்திரம் அணிய வேண்டும்.
கைவிசேடம் பரிமாறுவதற்கு நாளை காலை 6.05 முதல் காலை 7.10 வரையும், அதேநாளில் காலை 9.05 முதல் இரவு 9.56 வரையும் சுபநேரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

