இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் பற்றவையிடச்சென்ற பிரதமர்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை இன்று (வெப்ரவரி 15) விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், யாழ்ப்பாணம் நோக்கி தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை தனக்கிளப்பு பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்து சம்பவித்துள்ள நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய அதனையடுத்து பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றதோடு மக்கள் சந்திப்பிலும் ஈடுபட்டதோடு நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வைகிட்டுள்ளார்.
இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜா, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோரும் உடனிருந்தனர்.



