நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
விமானப்படைக்குச் சொந்தமான ஜெட் விமானம் விபத்து
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான K8 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது.
கட்டுநாயக்க பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த ஜெட் விமானம், ரேடார் தொடர்பை இழந்து, பின்னர் வாரியபொல, மினுவன்கெட்டே பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து நடந்த நேரத்தில் விமானத்தின் இரண்டு விமானிகள் இருந்ததாகவும், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

