நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வேதன விடயத்தில் அரசாங்கம் இன்னும் அக்கறையுடன் செயற்ட்படவில்லை – ஜோசப் ஸ்டாலின்
பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாது ஒழிப்போம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது அந்தச்சட்டத்தைப் பயன்படுத்தி பலஸ்தீனப் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களைக் கைது செய்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
அதிபர், ஆசிரியர் வேதன முரண்பாட்டிற்கு எதிரான போராட்டத்தின் காரணமாகவே தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறியது எனச் சுட்டிக்காட்டிய ஜோசப் ஸ்டாலின்,
ஆனாலும் இந்த விடயத்தில் அவர்கள் அக்கறையுடன் செயற்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்

