டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் நால்வர் கைது

600 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர்கள் நால்வர் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
சமீபத்திய கைப்பற்றப்பட்ட அதிகளவான சிகரெட் தொகை இதுவாகும் என சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
எமிரெட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்த கொழும்பு வெல்லம்பிட்டிய, தெமட்டகொட, பம்பலப்பிட்டிய மற்றும் கொஸ்வத்த பகுதிகளைச் சேர்ந்த 25 முதல் 30 வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்களே இவ்வாறு சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நால்வரும் விமான நிலையத்தை விட்டு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வெளியேற முயன்ற போது, ஒவ்வொருவரின் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர்களை சோதனையிட்டபோது, அவர்களின் 20 பைகளில் இருந்து குறித்த சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்களின் மொத்த பெறுமதி 600 இலட்சம் ரூபா என தெரியவருகிறது