மித்தெனியவில் இடம்பெற்ற மூன்று கொலைகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளினால் இது மேற்கொள்ளப்பட்டது. டுபாய்க்கு செல்ல முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 23 வயதுடையவர் என குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீ தலதா தரிசனத்தை பாதுகாக்க 10,000 பொலிஸார் கடமையில்

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள ஸ்ரீ தலதாவிஷயத்தின் பாதுகாப்பிற்காக 10,000 பொலிஸாரை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய மாகாண ஆளுநர் எஸ் அபேகோன், எதிர்வரும் 27ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து திட்டமும் அமுலில் உள்ளதாக தெரிவித்தார்.