நியூசிலாந்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.
ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

ஹெரோயின் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (28) கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பி.சி.சி பலாம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது