இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
ஹோமாகமவில் சுற்றித்திரியும் மான் கூட்டங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை

ஹோமாகம நகரைச் சுற்றியுள்ள பல கிராம சேவைப் பிரிவுகளில் பரவிவரும் மான் கூட்டங்களை பொருத்தமான பகுதிக்கு கொண்டுச்சென்று விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருண பனாகொட தெரிவித்துள்ளார்
மேற்படி பகுதிகளில் 1,500 முதல் 2,500 வரை மான்கள் இருப்பதாகவும், அவை விவசாய நிலங்கள் அனைத்தையும் சேதப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது, ஹோமாகம நகரைச் சுற்றியுள்ள 5 அல்லது 6 கிராம சேவைப் பிரிவுகளில் 1,500 முதல் 2,500 வரையிலான மான்கள் விவசாயிகளின் அனைத்து உடமைகளையும் அழித்து வருவதாகவும் .
அவற்றை மிகவும் பாதுகாப்பாக பிடித்து பொருத்தமான பகுதியில் விடுவிக்க முடிவெடுத்துள்ளோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்