இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
10 ரூபாவால் பாணின் விலை குறைப்பு

ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் இணங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வர்த்தக அமைச்சு வளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு
ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.